India vs New Zealand 4th 20 overs match

India vs New Zealand 4th 20 overs match

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று  நடக்கிறது. வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது.

பரிசோதனை முயற்சியை கையில் எடுத்தாலும், நியூசிலாந்து மண்ணில் தங்களது ஆதிக்கத்தை விடாமல் நிலைநாட்டுவதிலும் இந்திய வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய டாப்-4 பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களின் ரன்ஜாலம் இந்த ஆட்டத்திலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாகும்.

இங்கு அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்றதும் அடங்கும். இந்திய அணி இங்கு நியூசிலாந்துக்கு எதிராக 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் (2009 மற்றும் 2019-ம் ஆண்டு) தோற்று இருக்கிறது. அதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள்.மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது, ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசியாக நடந்த 3 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.