Smart protest in the road

Smart protest in the road

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாலையில் வீணான தண்ணீரில் சோப்பு போட்டு குளித்து போராடியுள்ளார். இதனை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சந்திரசேகர் நடத்திய ஸ்மார்ட் போராட்டத்திற்கு திருப்பூர் கலெக்டர் கவனத்திற்கு செல்லும் வர நெட்டிசன்கள் ஷேர் செய்துள்ளனர். இதனைக் கவனித்த திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.