BJP Leaders Appreciate Rajini's Explanation

BJP Leaders  Appreciate   Rajini's  Explanation

தந்தை பெரியார் குறித்த சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.

இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பெரியார் இயக்கங்கள் அறிவித்தன.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது, என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என கூறினார். இது பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் இப்பேச்சுக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.