Book Exhibition In Chennai

Book Exhibition In Chennai

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 43-வது புத்தக காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புத்தக காட்சியை துவங்கி வைக்கிறார்.

750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதால் அதனை வாங்கிச்செல்ல அடுத்த 10 நாட்களில் லட்சகணக்கில் புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.43 ஆண்டுகளாக இந்த புத்தக காட்சி நடைபெற்றாலும் கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த புத்தக் காட்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

அதில் கிடைக்காத தலைப்புகளே இல்லை என்கிற வகையில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சி நடைபெறும் 10 நாட்களுக்கும் அதிரடி சலுகை விலையில் புத்தகங்கள் விற்கபடுகின்றன.

43-வது சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு விழா வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறந்த அரங்குகள் உள்ளிட்ட புத்தக பதிப்பாளர்களுக்கு விருது வழங்குகிறார்.