Chennai celebrates the First day of 2020 with rain

சென்னையில் நேற்று இரவு முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.புத்தாண்டுக்கு இடையில் டிசம்பர் 31ம் தேதியில் இருந்தே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருடம் முழுக்க நன்றாக மழை பெய்தது. முக்கியமாக வடகிழக்கு பருவமழை நன்றாக மழை பெய்தது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.சென்னையில் சில இடங்களில் இப்போதும் மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் இன்றும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். வரும் 5ம் தேதி வரை இதேபோல் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments (0)