Competition To Other Countries (ISRO)

Competition To Other Countries (ISRO)

சந்திரயான் 1 என்ற விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி செலுத்தியது. இது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டதாகும். இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய அமைப்புகளை கொண்டது. லேண்டரானது நிலவில் மெதுவாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 

 நிலவின் தென்துருவத்தில் மென்மையான தரையிறங்கல் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நிகழ்ந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனானலேண்டரின்இணைப்புதுண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால இருநாட்கள்கழித்துலேண்டர்சாய்வாக  தரையிறங்கியிருந்ததை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியது.இதனால் உற்சாகமடைந்த விஞ்ஞானிகள், அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கையுடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 

 தென்துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் லேண்டரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சி 99 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாகவே சொல்லலாம். ஒருவேளை அந்த 1 சதவீதமும் வெற்றி பெற்றிருந்தால் தென்துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் இந்தியா 4-ஆவது நாடு என்ற பெருமையை பெற்றிருக்கும். இனி வரும் நாட்களில் இஸ்ரோவின் அனைத்து திட்டங்களும் வெற்றி அடைந்து விஞ்ஞான துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டுமே என ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாழ்த்துவோம்.