Court's order for stalin

Court's order for stalin

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சிமுன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழககாங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா்,மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், காங்கிரஸ்கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

அனுமதியின்றி நடைபெற்ற தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போ் மீது இந்தியதண்டனை சட்டத்தின் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகியபிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, சரத்குமார், காதர்மொய்தீன், திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் ஆகியோர் டிசம்பா் 26ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.