Death sentence to Coimbatore Child Abuse case

Death sentence to Coimbatore Child Abuse case

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார்.கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார்.


இவ்வழக்கை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் கைதான சந்தோஷ்குமார் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற நிலையில், 302வது பிரிவின் படி குற்றவாளிக்கு தூக்குத் தண்டைனை விதித்து நீதிபதி ராதிகா தீர்பளித்தார். 


அந்த மனு மீதான மேல் விசாரணைக்கும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளை விசாரிக்க கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் சார்பில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.