Phoenix wings infrastructure in Former CM's Memorial place

Phoenix wings infrastructure in Former CM's Memorial place

ஜெயலலிதா அம்மாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவையின் இறக்கை  வடிவமைக்க துபாயில் இருந்து பொறியாளர்களும், கட்டுமான ஊழியர்களும் சென்னை வந்துள்ளனர்.பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால் அன்று  அவரது நினைவிடத்தை திறந்து வைக்க முடிவுஎடுத்துள்ளார்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஆண்டுலளிருந்து   அம்மாவின் நினைவிட கட்டுமானப் பணி ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்று வறுகின்றது .மெரினாவில் ரூ.50 கோடி மதிப்பில்  நினைவிடம் பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று நுழைவுவாயில் பகுதி  அமைக்கப்பட்டுவருகிறது.பீனிக்ஸ் பறவை இறக்கை போன்ற பகுதியை பொருத்துவதற்காக துபாயில் இருந்து கட்டிக்கலை நிபுணர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினமே அவரது நினைவிடத்தையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இன்னும் நூறாண்டு கடந்தாலும் தனது ஆட்சியில் கட்டப்பட்ட ஜெ. நினைவிடம் கம்பீரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரார் முதலமைச்சர்.