First set of Voting Started Today

First set of Voting Started Today

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.மொத்தம் 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 ஊராட்சி தலைவர்கள் 37,830 ஊராட்சி உறுப்பினர்கள் மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள்  உள்ளனர்.


மாலை 5 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறும். வாக்களிக்க மொத்தம் 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.