First Step to catch drink and drive women

First Step to catch drink and drive women

தமிழகத்தில் முதல்முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க சென்னையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த படையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் வீதம் நான்கு படைகள் சென்னை மாநகரத்தின் நான்கு மண்டலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.இந்த தனிப்படையில் உள்ள பெண் போலீசார் தங்கள் உடையில் சிறிய கேமராக்கள் பொருத்தியபடி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.