தங்கம் , வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் , வெள்ளி விலை   அதிரடியாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 624 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதமாகவே தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்று நம்ப முடியாத அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மாதக் கடைசியில் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் இன்று மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 49 ரூபாயிலிருந்து ரூ.47.40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 47,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.