India has got 3000 tonnes of gold deposits

India has got 3000 tonnes of gold deposits

இந்தியாவின் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) உத்தரப்பிரதேச சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3,000 டன் தங்க படிமங்கள் கொண்ட சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது, இந்தியா வைத்திருக்கும் மொத்த தங்க இருப்பை  விட இது  ஐந்து மடங்காகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன் பஹாடி, ஹார்டி பகுதிகளில் இந்த தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே ராய் தெரிவித்தார்.

இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ள சோன்பத்ரா, மேற்கில் மத்தியப் பிரதேசம், தெற்கே சத்தீஸ்கர், தென்கிழக்கில் ஜார்கண்ட் , கிழக்கில் பீகார் ஆகிய நான்கு மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.