Kitcha Sudeep Vs Simbhu

Kitcha Sudeep Vs Simbhu

நடிகர் சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி திடீரென நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாநாடு பட வேலைகள் தொடங்கி உள்ளன. கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இதேபோல் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த சுதீப்பிடம் வெங்கட் பிரபு கதை சொல்லியுள்ளார். கதை பிடித்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.