Man who was asleep was shot

Man who was asleep was shot

சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில், தூங்கி கொண்டிருந்தவரை இன்னொரு வீரர் 7 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.  ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலை (HVF) இயங்கி வருகிறது.. இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இதில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கிரிகேஷ் குமார் என்ற வீரரு ஒருவர்.. வேலை முடிந்து இவர் ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு திரிபுராவை சேர்ந்த சக வீரர் நிலம்ப சின்கா என்பவர் வந்தார்.. கையில் இன்சாஸ் துப்பாக்கி வைத்திருந்தார்.. தூங்கி கொண்டிருந்த வீரர் மீது சரமாரியாக 7 ரவுண்ட் சுட்டுவிட்டார்.. இதில், கிரிஜேஷ் குமாரின் வலது கழுத்து, இடது முழங்காலில் குண்டு துளைத்து கொண்டு போய்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஷ்குமாரை, ஷிப்ட் மாற்றுவதற்காகத்தான் சின்கா ஓய்வறைக்குள் நுழைந்ததாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. இந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.