Mummy's Voice Discovery

Mummy's Voice Discovery

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோயிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர். மம்மியை சிடி ஸ்கேன் செய்த ஆய்வாளர்கள், அவரின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கினர். 

பின்னர் அதன் மூலம் மெல்லின வார்த்தைகளான ஆ மற்றும் ஏ என்ற உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பார்த்தனர்.தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நேஸியாமனின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.