Mystery in Jayalalithaa's death

Mystery in Jayalalithaa's death

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும் இதுகுறித்து அவர் உடன் மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தவர் பி எச் பாண்டியன்.எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் இணைந்து செயல்பட்டவர் பி எச் பாண்டியன். அது போல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை ஏற்க மறுத்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக நீக்கியபிறகு சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சேர்ந்துவிட்டார். அந்த கடிதத்தில், தனது சொந்தக்காரர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக கூறிய சசிகலா, அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமும் இல்லை என்று கூறி, சாதாரண உறுப்பினராக வந்தவர்.

ஜெயலலிதா மறைந்து 20 நாட்கள்கூட ஆகாதநிலையில், எல்லோரையும் பொது இடத்தில் பேச வைத்து, டி.வி.யில் பேட்டி கொடுக்கச் செய்து, உங்களுக்கு மட்டும்தான் தகுதி, நீங்கள் ஒருவர்தான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்' என்றும் சொல்ல வைத்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 2 நாளில் நடந்த நிகழ்வுகள் என் மவுனத்தை கலையச் செய்துவிட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கும் முதல்வர் பதவிக்கும் சசிகலா தகுதி அற்றவர் என பி எச் பாண்டியன் முழங்கினார். அவர் விரும்பியது போல் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாமல் சிறை சென்றார்.


பொதுச் செயலாளர் பதவியும் அதிமுகவின் இரு அணிகள் இணைந்த போது நடந்த செயற்குழு கூட்டத்தில் நீக்கப்பட்டு புதிய பதவிகளான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனது கருத்துகளை உரக்க சொன்ன பி எச் பாண்டியன் இன்று காலை இயற்கை எய்தினார்.