Onion Rate Is Expectetd To Be Down

Onion Rate Is Expectetd To Be Down

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை பிரமிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் நிலையில்  இரண்டு வாரங்களில் அதன் விலை குறையும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களில்  பெய்த கனமழையால் இந்த ஆண்டில் வெங்காய உற்பத்தி  பாதிக்கப்பட்டது.இதனால் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியது.ஒரு மாதமாகவே சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்து நிற்கிறது.

வெங்காய விலை எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய மொத்த விலை வெங்காயச் சந்தையான  லாசல்கான்     சந்தையில்     வெங்காயத்தின்           விலைகுறைந்துள்ளது.வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் தலைவரான சுவர்னா ஜக்டாத் இன்னும் இரண்டு வாரங்களில் வெங்காய விலை குறையும் என்கிறார்.