Rajeshwari ips receives award from president

Rajeshwari ips receives award from president

எந்த சொத்தும், சுகமும் இல்லாமல். வெறும் தியாகத்தையும், தூய எளிமையையும் மட்டுமே கையில் பற்றி கொண்டு மறைந்தவர் கக்கன்.அவரது பேத்தி ராஜேஸ்வரி இன்று ஜனாதிபதி கையால் டெல்லியில் விருது வாங்குகிறார்.

கடத்தல் பிரிவில் ராஜேஸ்வரியின் செயல் ஏராளமானது.. வீரதீர மிக்கது.. அவருடைய சேவையை பாராட்டி. நம் தமிழக அரசு பல விருதுகளை வழங்கி அவரை கவுரவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தின குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி விருது வழங்குவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் தமிழக போலீஸ் துறையில் 24 அதிகாரிகளுக்கு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரியும் ஒருவர் ஆவார். டெல்லியில் நடக்க உள்ள பிரம்மாண்டமான விழாவில் ராஜேஸ்வரி ஐபிஎஸ் சிறந்த போலீஸ் சேவை செய்தமைக்கான விருதை பெறுகிறார். எத்தனையோ இன்னல்களுடன் தன் போராட்ட வாழ்வை முடித்து கொண்ட கக்கனால், விருது வாங்கும் தன் பேத்தியை பார்க்க இன்று உயிருடன் இல்லாததுதான் பெரும் குறையாக உள்ளது.