Ranjikanth's Tweet On CAA Students Protest

Ranjikanth's Tweet On CAA Students Protest

சென்னையில்  குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் விவாதங்களைஉருவாக்கி உள்ளது .இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டுவதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து  வருகிறது. 

இந்த போராட்டங்கள் குறித்து நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி, "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதில் ரஜினியின் முதல் இரு வரிகளான எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது என்ற கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா அல்லது நடுநிலை வகிக்கிறாரா என்று கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.