Rename Chennai High Court-Modi

Rename Chennai High Court-Modi

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம். இது 1862ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் “சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று அழைக்கப்பட்டது.1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ”மெட்ராஸ் உயர் நீதிமன்றம்” என பெயர் மாற்றம் பெற்றது. மதராஸ் நகரம் “சென்னை” என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும், பாரம்பரிய பெருமைக்காக “மெட்ராஸ் உயர் நீதிமன்றம்” என்ற பெயரிலேயே தொடர்கிறது.


2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை” என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை ”தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் ”தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என்று முடிவெடுக்கப்பட்டது.  மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.உயர்நீதிமன்ற முழு அமர்வின் முடிவை பொருட்படுத்தாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றுவதற்கான சட்டத்திருத்த முன்வரைவை மத்திய அரசு தயாரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.