Sani peyarchi 2020

Sani peyarchi 2020

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு தை 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் இடப்பெயர்ச்சி டிசம்பர் 27ஆம்தேதிதான் என்று திருநள்ளாறு ஆலயம் அறிவித்துள்ளது என்றாலும் சனிபகவான் செய்யும் மாயங்கள் இப்போது முதலே 12 ராசிக்காரர்களுக்கும் செயல்பட ஆரம்பித்திருக்கும்.

சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும். ஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு.

தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்றிருந்தால் அவர் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார்.

நீதி நேர்மை இல்லாதவர்கள், சுத்தம் இல்லாத வீடுகள், அழுக்கான ஆடை அணிபவர்கள், பிறன்மனை நோக்கும் ஆண்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களைக் கண்டாலே சனிபகவானுக்குப் பிடிக்காது. சனியை சாந்தப்படுத்தும் வகையில் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.