Solar eclipse in India

Solar eclipse in India

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை.சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு நீலகிரியில் தெரிய தொடங்கியது.

மேலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. கேரளாவின் கொச்சியிலும் ஒடிஷாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.

ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.