SRM college students Arrested

SRM college students Arrested

எஸ்ஆர்எம் சென்னையில் பிராதன கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி சென்னை மற்றும் புறநகர் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் வட சென்னையின் எல்லையிலிருந்தும் செங்கல்பட்டை தாண்டியும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.பணம் கட்டினால் போதும் மதிப்பெண் அவசியமில்லை என்ற கூற்று அந்த கல்லூரியில் சேரவிரும்பும் சில மாணவர்களுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. வளாகத்திற்குள்ளேயே கேன்டீன், விடுதி, ப்ரீவியூ தியேட்டர் என அனைத்து வசதிகளும் இருந்தும் கெத்தை மட்டும் விடக்கூடாதென மாணவர்கள் தங்களுக்குள் கொலை வெறியாக தாங்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரி கேன்டீனுக்குள் மாணவர்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டது. அந்த சண்டையில் ஒரு மாணவர் துப்பாக்கியை வைத்து கொண்டு வேறொரு மாணவரை துரத்தி சென்ற காட்சி அந்த கால்லூரிக்குள் எத்தனை அட்டூழியங்கள் நடந்து வருகிறது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியது. இந்த சண்டையில் ஈடுபட்ட முன்னாள், இந்நாள் மாணவர்கள் பத்து பேரை மறைமலைநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.