Surya Burst Out in Tears

Surya Burst Out in Tears

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா. பல்வேறு சமூக பிரச்சனைகளை களைய அக்கறை காட்டி வருபவர். நடிப்பை தவிர விவசாயிகள் பிரச்சனை, ஏழை மாணவர்களின் படிப்பில் தனி கவனம் செலுத்தி வருபவர். இதற்காகவே அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில்  வித்தியாசம் தான் " அழகு உலகம் பிறந்தது நமக்காக" என்ற 2 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யாவும் இதில் பங்கேற்றார்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை மாணவி தன் அனுபவத்தை, தன் கல்வி கனவு நனவாகியதை பற்றி பேச வந்தார்... மிக மிக எளிமையான, இயல்பான தோற்றத்தில் அந்த பெண் பேசிய பேச்சு அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தியது. யதார்த்த பேச்சுதான்.. ஆனால் ஆழமான பேச்சு. திடமான பேச்சு. சிறிதும் பிசிறில்லாமல், தைரியமான பேச்சு. எத்தனையோ மாணவர்களுக்கு ஊக்கமும்-உத்வேகமும் தரும் பேச்சு அது,மாணவி பேசும்போது, என் அப்பா ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி. ரத்த ரத்தமா வாந்தி எடுத்தாரு.. தூக்கு போட்டு செத்துடலாம்னு நினைச்சு ரூமுக்குள்ள போனாராம்.. ஆனால், தூக்கில தொங்கிறதை பார்த்து என் தம்பி பயந்துடுவான்னு நினைச்சு. என் அப்பா அழுதுட்டே திரும்பி வந்துட்டாராம். இதை என்கிட்ட அப்பாவே சொல்லி அழுதாரு.  அப்பறம் ரத்த ரத்தமா வாந்தி எடுத்து இறந்துட்டாரு.. என் அம்மா தினக்கூலி வேலை செய்றாங்க.என்று இந்த மாணவி தன் வீட்டு தரித்திர சூழல்களை புட்டு புட்டு வைத்தார்.

அதுவரை உட்கார்ந்து கண்கலங்கி பார்த்து கொண்டிருந்த சூர்யா, அதற்கு மேல் உட்கார முடியாமல் எழுந்து வந்து மாணவியை அரவணைத்து கொண்டார். மாணவியின் கண்களிலும் கண்ணீர், சூர்யாவின் கண்களிலும் கண்ணீர். சுற்றியிருந்தவர்களும் கலங்கி விட்டனர். மாணவிக்கு ஆறுதல் சொல்லியபிறகுதான் சூர்யா வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தார். இந்த நெகிழ்ச்சி வீடியோதான் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.