Tamil Nadu is Second Place

Tamil Nadu is Second Place

இன்றைய கால கட்டத்தில் சென்னை, மும்பை, டெல்லி, அஹமதாபாத் போன்ற பெரு நகரங்களில் மிகப் பெரிய சவாலாக வளர்ந்து கொண்டு இருக்கும் பிரச்சனை சாலை நெரிசல் தான்.இந்த சாலை நெரிசலுக்கு எதை எல்லாம் முக்கிய காரணமாகச் சொல்லலாம் என்று பார்த்தால், வாகன அதிகரிப்பும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.


1000 பேரில் எத்தனை பேர் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கிறார்கள் என்றால், அதில் குஜராத் மாநிலம் 450 வாகனங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தன் மோட்டார் வாகன பதிவுகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறதாம். இது கடந்த டிசம்பர் 31, 2019 வரையான கணக்காம்.


அடுத்த இடத்தில், 1000 பேருக்கு 445 வாகனங்களுடன் நம் தமிழகம் இரண்டாமிடத்தில் இருக்கிறதாம். அதான் பொங்கல் லீவுக்கு பெருங்களத்தூர தாண்டவே 5 மணி நேரம் ஆகுதா..? தமிழகத்தைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 1000 பேருக்கு 372 வாகனத்துடன் கர்நாடகாவும், 335 வாகனங்களுடன் மகாராஷ்டிரா 4-வது இடத்திலும், 190 வாகனத்துடன் உத்திரப் பிரதேசம் 5-வது இடத்திலும் இருக்கிறதாம்.