Tradition of Pumpkin flower.

Tradition of Pumpkin flower.

பூசணிப்பூ பொன் மஞ்சள் நிறமானது. இந்திரனுக்குப் பிரியமானது. மழை மேகங்களுக்கு இடையே தோன்றும் இடியின் தேவதைகளே பூமியில் பூசணிக் கொடியாகவும் மலராகவும் தோன்றுகின்றன என்று நம்புகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில்  பெரிய பெரிய கோலங்களை இட்டு அதை வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்வர். அதன் நடுவில் சாண உருண்டைகளைப் பிடித்து வைத்து அதன் மீது பூசணிப் பூக்களைப் பொருத்தி வைக்கின்றனர்.

சாண உருண்டை மீது பூசணிப் பூக்களை வைப்பதற்குப் பலவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. சாணமும் அது மெழுகிய இடமும் லட்சுமியின் வாசஸ்தலமாகும். லட்சுமியை வரவேற்கும் வகையில் வீட்டு முற்றத்தைச் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு இந்திரனுடன் அவளை வரவேற்கவே இந்திர மேக புஷ்பமான பூசணிப் பூக்களை வைக்கிறோம் என்கின்றனர். இடிகள் சாணக் குவியல்கள் மீது விருப்பமுடன் பாய்ந்திருக்கும் என்பதால் இடியின் மலர்களான பூசணிப் பூக்களைச் சாண உருண்டையின் மீது பொருத்தி வைக்கின்றனர் என்பர். இவ்வழக்கத்தைப்  பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கல்யாண பூசணி திருஷ்டி தோஷங்களைப் போக்குவது அதனால் அதைத் திருஷ்டி நீங்க வீட்டின் வாயிலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அது தீய சக்திகளை அமானுஷ்ய தீமை செய்யும் எண்ணக் கதிர்களை இழுத்து அழிப்பதாகும்.