vaikunda Yegathesi Cultural Rituals

vaikunda Yegathesi Cultural Rituals

மார்கழி மாதம் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அன்றைய தினம் சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலைத் திறந்து வைப்பார்கள். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும்.அன்று முழு நாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து சாப்பிட்டால், நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.

குசேலனைக் குபேரனாக்கிய நாள்தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏகாதசியன்று அதிகாலையில் விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும் சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.சூரிய உதயத்திற்கு முன்பே விஷ்ணுவை வழிபட்டு உணவு அருந்துவது நல்லது. மதியம் பலகாரம் சாப்பிடுவதும் நன்மை தரும்.