Which Is The Birthplace Of Sai Baba

Which Is The Birthplace Of Sai Baba

சாய்பாபா பிறந்த இடமாகக் கருதப்படும் பாத்ரியின் மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்குவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. ஆனால், சாய்பாபா பிறந்த இடம் பாத்ரி என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, ஷீரடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பந்த் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு பதிலடியாக பாத்ரி மக்களும் கூட இதுதொடர்பாக பந்த் அறிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய்பாபா தங்கள் கிராமத்தில் தான் பிறந்தார் என்று பாத்ரி மக்கள் கூறுகின்றனர். அதற்கு 29 ஆதாரங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். ஆதாரங்கள் என அவர்கள் கூறும் 29 விஷயங்களில் ஒன்றையாவது காட்ட வேண்டும், இல்லாவிட்டால் அவை வெறும் அனுமானம் என்றாகிவிடும் என்று ஷீரடி மக்கள் கூறுகின்றனர்.இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஜனவரி 20 ஆம் தேதி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்ததும், இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.